கிராம சேவையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள், கணனிகள் நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளன
நாட்டில் உள்ள 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவில் பணியாற்றும் 11 ஆயிரம் கிராம சேவையாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடி கணனிகள் என்பன நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களை விநியோகிக்கும் வைபவம், முதலில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னெடுப்பதற்கும், பின்னர் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் கிராம சேவகர்களுக்காக வழங்கப்படுமெனவும், அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய கணக்கெடுப்பின்படி, இலங்கையில் பணியாற்றும் கிராம சேவகர்களில் 25 வீதமானோர், பெண்களாவர். கிராம சேவை அதிகாரிகள், தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை முழுமையான கட்டணம் செலுத்தியோ, தவணைக் கொடுப்பனவின் மூலமோ பெற்றுக்கொள்ள முடியுதெனவும் மடி கணனிகளுக்கான கட்டணத்தில் அரைவாசியை கிராம சேவகர்கள் செலுத்துவதுடன், எஞ்சிய தொகையை அரசாங்கம் தவணை முறையில் செலுத்தும் எனவும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பிற்காக சகல கிராம சேவை அதிகாரிகளுக்கும் பராமரிப்பு கொடுப்பனவும் வழங்கப்படுமெனவும், அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment