இரண்டு இலட்சம் வரையில் உள்ள இராணுவத்தினர் நாட்டின் “பாதுகாப்பு நடவடிக்கை” மற்றும் “ நாட்டைக் கட்டியெழுப்பும் சேவை” என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படவிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறுகிறார்.
அதன்படி, ஒரு இலட்சம் இராணுவத்தினர் நேரடியாக நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு மாத்திரம் தெரிவு செய்யப்படுவார்கள். இராணுவத்தினரின் மனநிலை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப இசைந்தொழுகும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இரணுவத்தளபதி கூறுகின்றார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இராணுவம் பங்களிப்பு செய்தல் வேண்டும் எனத் தெரிவிக்கும் அவர், விவசாயம் தொடர்பாக ஆறு அணிகள் தற்போது இராணுவத்தில் செயல்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment