Tuesday, July 17, 2012

ஈரானில் இருந்து கனடாவுக்கு குடியேறிய கம்ப்யூட்டர் ஹக்கிங் குழு சிக்கியது!

கனேடிய சிறப்பு போலீஸ் பிரிவு RCMP

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அதி முக்கிய 800 நபர்களின் அல்லது அமைப்புகளின் கம்ப்யூட்டர்களை ஹக் பண்ணும் குழு ஒன்று கனடாவில் இருந்து இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில்தான் இந்த குழுவினர் ஈரானில் இருந்து கனடாவில் குடியேறியுள்ளனர் எனவும் கனேடிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஈரானில் துவங்கிய இந்த கம்ப்யூட்டர் ஹக்கிங், ஆயிரக் கணக்கான ஆவணங்களை 800 வெவ்வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து திருடியது தெரியவந்துள்ளது. இவர்களது இலக்குகள் அனைத்துமே, மத்திய கிழக்கு நாடுகளில்தான் இருந்துள்ளன.

பாதிக்கப்பட்ட நபர்கள் மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் உள்ளார்கள். அதிகபட்சம் ஈரானிலும், அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் இஸ்ரேலிலும் உள்ள நிதி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ராஜதந்திரிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

பார்சி மொழி பேசும் சிலர் அடங்கிய இந்த குழு, கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனிப்பட்ட முறையில் இதை செய்தார்களா, அல்லது இவர்களின் பின்னணியில் ஒரு நாடு, அல்லது உளவுத்துறை உள்ளதா என்பது இன்னமும் தெரிய வரவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com