வவுனியாவில் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்.
புளொட்டின் 23ஆவது வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட ஜூலை 13ம் திகதியில் இருந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்கள் கொல்லப்பட்ட 16ம் திகதிவரையான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது.
வீரமக்கள் தின இறுதி நாளான இன்று (16ம் திகதி) வவுனியா, கோயில்குளம், உமாமகேஸ்வரன் சமாதியில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜி.ரி.லிங்கநாதன், வை.பாலச்சந்திரன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள், புளொட் உறுப்பினர்கள், புளொட் சுவிஸ்கிளை சார்பில் ந.தீபன், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பாடசாலைச் சிறார்களுக்கு புத்தகம், கொப்பி, புத்தகப்பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டது. இதேவேளை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்ட புளொட் காரியாலயங்களிலும் வீரமக்கள்தின அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.
0 comments :
Post a Comment