கூட்டமைப்பில் சமத்துவ பிரதிநிதித்துவமா? கேட்க சித்தா, சங்கரிக்கு அருகதையில்லை
ஒருவர் கட்டுக்காசை இழந்தவராம், மற்றவர் காட்டிக்கொடுத்தவராம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தங்களுக்குச் சமத்துவப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 9223 வாக்கு கள் மட்டும் விழுந்தன. போட்டியிட்ட அனைவரும் கட்டுக்காசை இழந்தனர். அப்படியான கட்சிக்கு எப்படி சமத்துவப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியும்?
இப்படி சம பிரதிநிதித்துவம் கேட்கும் கட்சிகள் எதற்குமே மக்கள் பற்றிக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. அவற்றின் குறிக்கோள் தேர்தலை மையமாக மட்டும் இருக்கிறது. ஒற்றுமை நல்லதுதான். ஆனால் அந்த ஒற்றுமை ஒத்த அரசியல் சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு போன்றவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். தேர்தலை மட்டும் மனதில் வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளோடு ஒற்றுமை என்பது சாத்தியமில்லை.
போராட்ட காலத்தில் புளொட் சித் தார்த்தன், ஆனந்தசங்கரி போன்றவர்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். போரில் அரசுக்குக் கிடைத்த வெற்றியில் புளட்டுக்கும் பங்குண்டு என சித்தார்த்தன் பேசி வரு கிறார். அப்படியான ஒரு கட்சிகளோடு ஒற்றுமை என்ற பெயரில் ஒன்றாக இருப் பது எப்படிச் சாத்தியம்? தமிழரசுக் கட்சி யைத் தலைமை சக்தி என்று ஏற்றுக்கொள் ளாத கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிலிருந்து வெளியேறச் சுதந்திரம் உண்டு. தேர்தலில் சமபிரதிநிதித்துவம் வேண்டும். சுழற்சி முறையில் தலைவர் பதவி கொடுக் கப்பட வேண்டும் என்ற சொல்கின்ற அல்லது கேட்கின்ற கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதே இரு தரப்பாருக்கும் நல்லது.
1 comments :
இருக்கிறன்டா எங்களை (தமிழரசுக் கட்சியை ) பிரதான கட்சியா ஏற்றுக்கொண்டு இருங்கடா இல்லையென்றால் வெளியேறுங்கடா.. இதுதான் கதை. புளொட்டென்று புலன்பெயர்ந்த கிலுக்கி கொண்டு திரியிறவையிளின்ட காதிலை கேட்குதோ?
Post a Comment