Tuesday, July 10, 2012

டெங்கு ஒழிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் உலக்கையால் தாக்கி படுகொலை

தம்பலகாமம் பகுதியில் டெங்கு ஒழிப்புக் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உலக்கையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கந்தளாய்- தம்பலகாம பகுதிலுள்ள வீடொன்றுக்குச் சென்று டெங்கு தெளிவூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு திரும்பிய போது, 52 வயதான மொஹமட் பலீல் என்ற பொது சுகாதார பரிசோதகரை அங்கிருந்த ஒருவர் உலக்கையால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது, பொது சுகாதார பரிசோதகர் குழுவொன்று கந்தளாய்- தம்பலகாமத்திலுள்ள குறித்த வீட்டுக்குள் டெங்கு தெளிவூட்டும் நடவடிக்கைக்காக சென்றுள்ளனர். இதன்போது வீட்டில் தங்கியிருந்த பெண் ஒருவருக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் குழாம் குறித்த வீட்டில் இருந்து வெளியேறி வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண்ணின் மகன், பொது சுகாதார பரிசோதகரை உலக்கையால் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிவில் பாதுகாப்பு படையில் இருந்து விலகிய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com