குற்றமிழைக்கும் அரசியல்வாதி தப்பிக்க முடியாது – பாதுகாப்புச் செயலாளர்.
எந்த அரசியல் வாதியாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவரது சமூக அந்தஸ்தை கவனத்தில் கொள்ளாது சட்ட நடிவடிக்கைகு உட்படுத்தப்படுவார் எனவும், தனியார் அல்லது அரச காணிகளைக் கைப்பற்றி அல்லது அவற்றில் அத்துமீறல் செய்தோ அல்லது பொது மக்களுக்களை தொந்தரவு ஏற்படுத்த எந்த அரசியல்வாதிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதைப் பொருள் வியாபாரிகள், கூலிப்படையினர், கப்பம் கேட்போர் கடுமைகத் தண்டிக்கப்படுவார்கள். இதன் ஊடாக பாதாள உலகத்தினர் துவம்சம் செய்யப்படுவார்கள். அதன் மூலம் அமைதியான சூழலை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.
குற்றம் புரியும் எந்த அரசியல்வாதியையும் நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கு பொலிஸார் சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சியினரும் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊடக மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment