Thursday, July 19, 2012

அலுக்கோசின் சம்பளம் எவ்வளவு ?

அலுக்கோசு வேலையின் 4 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கான தகைமையானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று சிறைச்சாலைத் திணைக்களம் கூறுகின்றது. தூக்கு மரம் நாட்டப்பட்டுள்ள வெளிக்கடை மற்றும் போம்பரை சிறைச்சாலைகளில் இவ்விரண்டு வெற்றிடங்கள் இருக்கின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் நீதிமன்றத்தால் தணடனை விதிக்கப்பட்டவராக இருத்தல் ஆகாது. அவர்களின் மாதச் சம்பளம் ரூபா 17,600. 00 என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பி. டப். கொடிப்பிலி குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com