ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் நீடிக்கப்பட்டது எமக்குச் சாதகமானதே. அவரால் ஒருபோதுமே வெற்றி பெற முடியாது என்று ஐமசுகூ வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த அண்மையில் கொழும்பு மகாவலி கேந்திர சிலையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.
இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் மூன்று மாகாண சபைகளிலும் ஐமசுகூ சார்பில் போட்டியிடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் 129 பேரும் தேர்தல் ஆணையாளரின் கட்டளைப்படி தமது சொத்து விபரங்ளை அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தாம் அவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அத்துடன் கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தலைவர்கள் தம் வசம் இருக்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா உடைமைகளை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் எவரும் தேர்தல் வேலைகளுக்கு அரச சொத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டளையிட்டிருப்பதாவும் கூறினார்.
இதில் உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா ஜேவிபின் தேர்தல் பெறுபேறு காலங் கடந்த தென்றும் 40 ஆசனங்களைக் கொண்டிருந்த அவர்கள் 4 ஆசனங்களையே கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார். மேலும், ஜனாதிபதி அவர்கள் வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஐமசுகூ வின் வெற்றியில் சந்தேகமே இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment