தூக்கிலிடப்பட முடியாதென்றால் சாகும்வரை சிறையிலிடவும் – கடுவலை மக்கள்.
இந்த நாட்டின் பண்பாட்டை அழிக்கும் வண்ணம் தினந்தினம் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதற்காக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இவர்களின் சார்பில் எந்த சட்டத்தரணியும் வாதாடக் கூடாது என்றும் கோரி நேற்று கடுவலை நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இவ்வார்பாட்டத்தில் கடுவலையைச் சுற்றியுள்ள பிரதேசங்களின் மக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். கடுவலை திகமவ தியனியோ காந்தா அமைப்பும் தேசய சுரக்கீம அமைப்பும் இணைந்து நடாத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கடுவலை துணை மேயர் பத்திக ஜயவிலாலும் கலந்து கொண்டார்.
இதேவேளை, தூக்கிலிடுவது சரியான முறையில் நடைபெறுமா என்பதை அறிந்து கொள்வதற்காக விசேட பரீட்சை இடம் பெறுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. தூக்கிலிடப்படும் மனிதரின் நிறைக்குச் சமனான நிறையைக் கொண்டு இந்தப்ப பரீட்சை மேற்கொள்ளப்படுவதாகவும் தூக்கிலிடுக என்ற ஆணை பெற்றால் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பரீட்சை நடைபெறுகின்றது எனவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment