சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் 60% மான சிறுவர் துஸ்பிரயோகள் அவர்களின் விருப்பத்துடனயே இடம் பெறுவதாகவும், துஸ்பிரயோகத்திற்குள் ளானதாக கூறப்படும் சிறுவன் அல்லது சிறுமி, முதலில் விருப்பத்துடனே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர் எனவும், சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இவர்கள் பாலியல் தொடர்பில் ஈடுபட்டமை பெற்றோருக்கு தெரியவந்ததன் பின்னரே, இது குறித்து முறைபாடு செய்படுவதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலவந்தமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாடுகள் மிகவும் அரிதாகவே கிடைப்பதாகவும், யுவதி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும், 18 வயது சிறுவனும், 15 வயது சிறுமியும் காதலித்து இவ்வாறு நடந்துக் கொள்வதை பாலியல் துஸ்பிரயோகமாக கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்களை தடுக்க வேண்டியது பெற்றோர்களே எனவும், பெற்றோர்களின் கவனயீனமே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment