Monday, July 2, 2012

பெர்லினில் இந்தியாவுக்கு எதிராக இலங்கைத் தமிழர் கோஷம்.

செங்கல்பட்டு விசேட தடுப்பு முகாமில் இலங்கைத் தழிழரை விடுவிக்க கோரி ஜெர்மனியில், பெர்லின் நகரில் உள்ள இந்தியத் தூதரகதுக்கு முன்னால் இலங்கைத் தமிழ் புகலிடவாதிகளால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.

இலங்கை அகதிகளை கண்ணியமாக நடத்தும் படி அவர்கள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமிழ்நாடு செங்கல்பட்டு அகதி முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

செங்கல்பட்டில் இடம் பெறும் ஆர்ப்பாட்டம் பொலிசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com