Friday, July 13, 2012

இந்தியவம்சாவழிப்பெண் USA வில் கற்பழிக்கப்பட்டு கொலை! அமரிக்க இராணுவ வீரர் கைது!

இந்திய வம்சாவளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள். கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது டிரேசி நகரம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் டிரேசி ஹசின்டா இன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் லலிதா படேல். வயது 62. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை இரவு ஹோட்டலில் சாப்பிட ஸ்டீபன் கேரிரோ என்ற 25 வாலிபர் வந்தார். திடீரென லலிதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராணுவ பணியில் இருந்த ஸ்டீபன் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹோட்டலில் லலிதாவை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு தப்பிக்கும் போது போலீசார் மடக்கினர். அவர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். எனினும் போலீசார் ஸ்டீபனை கைது செய்தனர். அப்போது அவர் நிர்வாணமாக இருந்தார். அவர் மீது பலாத்காரம், கொலை, முதியவர்களை சித்ரவதை செய்தது, போலீசாரின் பணியை தடுத்தது உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினார். இந்த வழக்கு 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com