அணுமின் நிலையம் அமைக்க பாக்கிஸ்தானுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை - சம்பிக்க
பாக்கிஸ்தானின் உதவியுடன் இலங்கையின் கிழக்குப் பகுதியில் அணு மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட விருப்பதாக, அண்மையில் இந்திய செய்தியிதழ்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், இது தவறான வழியில் இட்டுச் செல்வதென்றும், அயல்நாடுகளுடனான இலங்கையின் உறவைப் பாதிக்கக் கூடியது என்றும், மின்வலு மற்றும் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓர் அணுமின் நிலையத்துக்கான எந்தவொரு உடன்படிக்கையும் எந்தவொரு நாட்டிடமும் இல்லையென்று தெரிவித்த சம்பிக்க ரணவக்க, இலங்கை அணு சக்தி அதிகாரசபை, அண்டைய நாடுகளிலிருந்து வரும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 7 எச்சரிக்கை நிலையங்களை அமைக்க கடந்த மாதம் தீர்மானித்ததாகவும், அதற்கு பன்னாட்டு அணுசக்தி அதிகார சபை உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க ஆயத்தமாதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை நிலையங்களின் தேவைப்பாடு எழுந்ததென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment