கத்திக் குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி
மாவத்தகம பொலிஸ் பிரிவில் பறகஹதெனிய பிரதேசத்தில் இரவு 10 மணி அளவில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்திற்கு இலக்கான நபர் ஒருவர் மாவத்தகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்ப் பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் பறகஹதெனிய கதுருவகங்க என்ற இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சித்தீக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment