Saturday, July 28, 2012

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 53 ஆவது மைல் கல் பகுதியில் வாகனமொன்று குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com