மத்திய அமைச்சர்மாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கதவடைப்பு
கட்சிக்காக பாடுபடும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு இம்முறை மத்திய அமைச்சர்களின் மனைவிமார், மற்றும் பிள்ளைகளுக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிபக்க மாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிரிசேன திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இம்மாதம், 6 ம் திகதி நடைபெறும் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் சபைக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும், அரசாங்க கட்சியில் உள்ளவர்களும் ஐ.தே.க வில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது சம்பந்தமாகவும் இக்கட்டத்தில் ஆராயப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment