ஆப்கான் தற்கொலை படை தாக்குதலில் சோவியத் படைகளை எதிர்த்த ராணுவ தளபதி படுகொலை
ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் சோவியத் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய ராணுவ தளபதியும் அந்நாட்டு எம்.பி.யுமான அகமதுகான் சமன்கனி உள்ளிட்ட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமன்கான் மாகாணத்தில் இன்று காலை திருமண மண்டபம் ஒன்றில் இத்தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது. 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
1979 முதல் 1989 வரை சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திய ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதிகளில் முக்கியமானவர் அகமது கான் சமன்கனி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment