ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பின் போது, இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அதுபோலவே, இம்முறை தேர்தலில் வெற்றிபெறும் வண்ணம் செயல்படுவதாவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் ஐதேகவில் இருந்து பலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலசுக செயலவைக் கூட்டத்தில் மேலும்பேசிய அவர் எதிர் வரும் இரண்டு ஆண்டுகளில் பல தேர்தல்களுக்கு முகம் கொடுக்க ஆயத்தமாக இருக்குமாறு பணித்தார்.
இதேநேரம், கட்சித் தலைவர் பதவி ஆறு ஆண்டுகள் என்ற செயலவைத் தீரமானத்தை ரத்து செய்தல் உட்பட்ட தனது நிபந்தனைகளுக்கு தகுந்த பலன் கிட்டாதுவிட்டால் தனது எதிர்கால அரசியல் பற்றி தீர்மானம் எடுக்கவேண்டி வரும் என்று குருணாகலை மாவட்ட ஐதேக பா. ம.உறுப்பினர் தயாசிரி ஜயசேகர கூறுகின்றார்.
எவ்வாறாயினும் வரவிருக்கும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட தயாசிரி ஜயசேகர பேச்சுவார்த்தை நடாத்தியதாக இதற்கு முன்னர் செய்திகள் அடிபட்டமை தெரிந்ததே.
No comments:
Post a Comment