இரண்டு நண்பர்களின் மனைவிமாருக்கிடையில் தகராறு. ஒருவர் கொலை.
குருணாகலில் இரண்டு நண்பர்களின் மனைவிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராற்றில் கம்பகாவைச் சேர்ந்த சமிலா ருச்சிராணி விதானாராச்சி (36) என்ற பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கம்பகாவைச் சேர்ந்த சமிலா ருச்சிராணி விதானாராச்சி (36) மற்றும் அவரின் கணவர் சம்பவ தினத்தன்று காலை சந்தேக நபரின் வீட்டுக்கு வந்துள்ளனர். பகலுணவுக்குப் பின்னர் நண்பர்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த வேளையிலேயே, மனைவிமார் இருவருக்கு மிடையில் தகராறு ஏற்பட்டு, குளியலறையில் வைத்து கழுத்தில் வெட்டப்பட்டு சமிலா ருச்சிராணி இறந்திருக்கிறார்.
இதனையடுத்து, சந்தேக நபரான 38 வயது ரோசிகா மரீனா ரணசிங்கவை,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, குருணாகல் பதில் நீதவான் ரஞ்சனி ஹேரத் ஜூலை 11 வரை சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்க நேற்று உத்தரவிட்டுள்ளார். காயம் காரணமாக கொலைச் சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த கொடூர கொலைக்கான காரணத்தை இரு கணவர்மாரும் வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment