இலங்கையில் மின்சார ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான திட்டம்.
இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில் சேவையினை ஆரம்பிக்கும் திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் முதற் கட்டமாக வெயாங்கொடையிலிருந்து களுத்துறை வரை மின்சார ரயில் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதற்காக ராகம, பாணந்துறையில் இரண்டு மின்சார உப நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment