Saturday, July 28, 2012

கடும் போக்குச் சிங்களவர் என்னை படுகொலை செய்யவிருந்தனர் - எரிக் சொல்கெய்ம்.

2000 மே 22 ல் இலங்கை வந்தபிறகு தன்னைப் படுகொலை செய்ய கடும் போக்கு சிங்களவர்கள் திட்டமிட்டிருந்தாக நோரவேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் கூறியுள்ளார்.
பதில் செயலாளர் ரேமன்ட் ஜொகான்சன் உட்பட பலருடன் 3 நாள் பயணமாக தான் ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்திக்க வந்ததாகவும், இங்கு வந்த பிறகு இது தொடர்பாக அறிந்து கொண்டதாவும் அவர் கூறியுள்ளார்.

சிங்களக் கடும்போக்குவாதிகள் குழுவொன்று இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்றும், தாம் இலங்கைகு வருவதற்கு முன்பு, இலங்கை பொலிஸ் பாதுகாப்புச் சேவைக்கு நோர்வேயில் இருந்தவர்கள் இதுபற்றிய அறிக்கை அனுப்பிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். வேறு நாடுகளில் நோர்வேகாரர்களுக்கு இவ்வாறு நடப்பதில்லையென்றும் சொல்கெய்ம் கூறுகின்றார்.

தமது பயணத்தில் போது இலங்கை அரச பிரதிநிதிகளுடன் போன்று எல்ரிரிஈ பிரதிநிதிகளுடனும் பேசவேண்டியிருந்த தென்றும் அவ்வாறு போகும் சமயத்தில் திணைக்களத்தால் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டதென்றும் அவர் கூறுகின்றார். தனது பயணம் முடிவடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு நோர்வே தூதரகத்துக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதென்றும் அது தன்னைனக் குறிவைத்துச் செய்யப்பட்டதா என்று நிச்சயிக்க முடியவில்லையென்றும் சொல்கெய்ம் கூறுகின்றார்.



No comments:

Post a Comment