ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வான் சாரதி கைது
புத்தளம், மாறவில தேசிய பாடசாலை ஒன்றில் இரண்டாம் தரத்தில் கற்வி பயிலும் ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தினமும் பாடசாலை வானில், பாடசாலைக்கு சென்று வருபவர் எனவும் அவ் வாகனத்தின் சாரதியினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகன சாரதி சிறுமியை இரண்டு வாரங்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மாறவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment