அஸ்ஸாமில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கு தர்ம அடி (படங்கள்)
இந்தியாவில் அஸ்ஸாமில் தொலபா வனப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற ராணுவ வீரர்களை கிராம மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி கவுகாத்தியில் மதுபான பாருக்கு வெளியேஇளம்பெண் ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் மானபங்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அந்த மாநிலத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. இம் முறை பாலியல் வன்மத்தில் ஈடுபட முயற்சித்திருப்பது அந்நாட்டு ராணுவத்தினர்.
அஸ்ஸாமில் தொலபா வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் விறகு சேகரித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணைஇ கற்பழிக்க முயன்றனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய கிராம மக்கள் ராணுவத்தினரின் பிடியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அங்கிருந்த பெண்கள் கூடி இராணுவத்திரை நையப்பபுத்துள்ளனர்.
கிராம மக்களிடம் இருந்து தப்பித்த ராணுவத்தினர் அப்பகுதியி்ல் இருந்த ராணுவ முகாமை காலி செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என்பதாலும் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment