இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயங்களை கடத்த முயன்ற இலங்கையர் கைது.
இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஜி-9506 விமானத்தின் மூலம், சார்ஜா நோக்கி பயணம் செய்வதற்காக வருகை தந்த வர்த்தகர் ஒருவரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா டொலர், யூரோ, குவைட் டினார், சவூதி றியால், ஜோர்தான் டினார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்கள், குறித்த வர்த்தகரின் கைப்பையில் காணப்பட்டதாகவும் , பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment