ஆறாண்டுக்கொருமுறையே கட்சித் தலைவர் தெரிவு! நான் எப்போதும் தலைவராக இருக்க மாட்டேன்!
சரத் பொன்சேகா மூன்றாந் தரப்பின் தலையீடின்றி நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் கட்சித் தலைவரைத் தெரிவு செய்வதற்கு பதிலாக, ஆறாண்டுக்கு ஒரு முறை கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் முன்மொழிவை ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதி மற்றும் துணைத் தலைவர்கள் மற்றும் தேசிய அமைப்பாளர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் தேர்த்தெடுக்கப்படுவார்கள் எனவும், இவ்வாண்டு இறுதியில் இடம் பெறவிருக்கும் கட்சி மாநாட்டில் இதற்கு ஒப்புதல் பெறல்வேண்டுமெனவும், கட்சியின் தவிசாளர், செயலாளர் மற்றும் பொருளாளரை தலைவர் நியமிப்பார் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் யார் தலைவர் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், கட்சிக்கு நிலைப்பைக் கொடுக்கும் என்று தலைமை வகித்த ஐக்கிய தேசிய கடசி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்ரீ கோத்தாவில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து ஏற்ப்பட்ட சம்பவஙகள் பெரும்பாலான கட்சி உறுப்பனர்களும் அலுவலர்களும் ஆண்டுத் தேர்தலில் விரக்தியுற்றிருக்கிறார்கள் எனவும், நான் எப்போதும் தலைவராக இருக்க மாட்டேன் எனவும், ஆனால் கட்சி இருக்க வேண்டும் எனவும், ஆண்டுத் தேர்தலில் ஏற்படும் குழப்பங்கள் கட்சியின் அழிவுக்கும் பிரிவுக்குமே வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என விரும்பினால், முன்னாள் படைத் தளபதியும் ஜ.தே.மு வின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிக்கட்சிக் கூட்டமைப்பில் சேர்ந்து கொள்ளுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விரும்பினால் மூன்றாந் தரப்பின் தலையீடின்றி நேரடியாக ஐ.தே.க.வில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.
கிழக்கு, வடமத்திய மற்றும் சபரகமுவை மாகாணசபைத் தேர்தல்களுக்காக ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கான பிரச்சார முகாமையாளர்களாக நியமிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment