பொதுமக்கள் பாதுகாப்பு கொள்கையினை சிறந்த முறையில் மதித்து நடக்கும் நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதி பாலித கோஹன்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கும், புலி பயங்கரவாதிகளுக்குமிடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட்டு வந்ததாகவும், குறித்த காலப்பகுதியில் இலங்கையில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் செயலக அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக செயற்பட்டதாகவும், பாலித கோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு கொள்கையினை சிறந்த முறையில் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment