சிறைச்சாலை நிலைமைகளைச் சீர்செய்ய பாதுகாப்பு செயலர் தலைமையில் விசேட மாநாடு.
சிறைச்சாலைகளில் இடம் பெறும் கப்பம் கோரல், போதைப்பொருள் வியாபாரம்,, அச்சுறுத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உதவுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் 17ம் திகதி மாலை பாதுகாப்பு அமைச்சில் மறுவாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, ஆணையாளர் நாயகம் பி. டப். கொடிப்பிலி மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் சிறைச்சாலை திணைக்களத்தின் உதவிக்கு பொலிஸ் மற்றும் முப்படைகளின உதவி தேவையானால் அதை வழங்க முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
அதுபோல சிறைச்சாலைக்குள் உள்ள செல்லிடத் தொலைபேசிகளைக் கைப்பற்றுவதற்கும் சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்படும் நவீன தொழில் நுட்பக கருவிகளையும் கண்காணிப்பதற்கு ஸ்கேன் கருவி உட்பட பிற கருவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் பல்வேறு குற்றவாளிகள் பெரும்பாலோருக்கு நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ள முடியுமென்றாலும் அவர்கள் பிணை பெற்றுக் கொள்ளாமல் சிறைச்சாலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு பல்வேறு வியாபாரங்களைச் செய்து வரும் தகவலும் இங்கு வெளியாகியது.
சிறைச்சாலையில் இருக்கும் எல்ரிரிஈ கைதிகள் பூசாவில் உள்ள கைதிகள் மையத்துக்கு கொண்டு சென்று நீதி விசாரணை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனை வழங்கினார் என்றும் அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment