Wednesday, July 11, 2012

இலங்கையே முதலீடுகளுக்கு பொருத்தமான நாடு - அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனமான மெரியோட் சர்வதேச நிறுவனம் இலங்கையில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்வந்துள்ளது. இலங்கை முதலீடுகளுக்கு பொருத்தமான நாடு என குறித்த நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலய முகாமைத்துவ பணிப்பாளர் சீமென் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இயற்கை வனப்பிலும் ஏனைய வசதி வாய்ப்புகளிலும் இலங்கை பிராந்தியத்தில் சிறந்த சுற்றுலா கவர்ச்சிமிக்க நாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை சாதகமாக்கி, மெரியோட் சர்வதேச நிறுவனம் மாத்தறை வெலிகமவில் உல்லாச பயண ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 2014 ஆம் ஆண்டில் இதன் நிர்மாண பணிகள் முடிவடையவுள்ளன என தெரிவித்துள்ளார்.

200 அறைகள், மாநாட்டு மண்டபம், கண்காட்சி மற்றும் வர்த்தக தொகுதி உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்ட இவ் ஹோட்டல் இலங்கையின் உல்லாச பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் அரசின் செயல்த்திட்டங்களுக்கு மிகவும் பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளது.

இலங்கையின் ஹோட்டல் துறையில் தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மன், ஆகிய நாடுகள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதுடன் எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக மெரியோட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com