Thursday, July 5, 2012

கல்வி அமைச்சு பணத்தை வழங்கிவிட்டதாக கூறுகி ன்றது! ஆனால் கிழக்குமாகாண கல்வி திணைக்களம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க மறுக்கின்றது?

நாடெங்கும் பாடசாலைகள் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாண வர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டமானது கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதில் கேள்விக் குறியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஜீன் மாதம் வரைக்குமான காலப்பகுதிக்குரிய சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான பணத்தினை இதுவரை மட்டக்களப்பிலிலுள்ள பல பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக கல்குடா வலய பாடசாலை மாணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சத்துணவு வழங்குனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜீன் மாதம் முதலாம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அதிபர்களிடம் மேற்படி பணத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு வழங்கி விட்டதாக அதிகாரிகளினால் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது வரைக்கும் மாகாண கல்வி திணைக்களம் இது தொடர்பான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லையெனவும், தங்களுக்கு எதுவிதமான கொடுக்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென சத்துணவு வழங்குனர்களான வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வியடம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேற்படி நிலைமைக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென சகலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com