ரணில், திஸ்ஸ, மங்கள ஆகியோர் வெளியேறும் போதே ஐ.தே.க அரசாங்கம் அமைக்குமாம்.
ரணில், திஸ்ஸ, மங்கள ஆகியோரை தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இருந்து அகற்றி சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா கருஜயசூரியா போன்றோரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களாக நியமிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தொழிற் சங்கத்தைப் பாதுகாக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது
அதனூடாக நாட்டில் சுதந்திரம், அமைதி, சகோதரத்துவம், நீதி மற்றும் வழமையான நிலைமையை ஏற்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை உருவாக்க முடியும் எனவும் தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் நோயாளிகள் என்றும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகப் பண்பாடு சற்றேனும் இல்லாத மங்கள சமரவீரவால் நடாத்தப்படும் இணையத்தளம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
0 comments :
Post a Comment