Monday, July 2, 2012

சுவிஸிருந்து விதவைகளுக்கென அனுப்பப்பட்ட பணத்தை சுருட்டினார் சிறிதரன்.

சுவிற்சர்லாந்தில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டு சிறிதரன் எம.;பி.யிடம் வழங்கப்பட்ட பணம் இதுவரை மக்களை சென்றடையவில்லை என சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்து செங்காளான் மாநிலத்தை சேர்ந்த சிலர் இலங்கையிலுள்ள விதவைகளின் பெயரால் மக்களிடம் பணத்தை அறவிட்டு அப்பணத்தை, இலங்கையிலுள்ளவர்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்குமாறு சிறிதரனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், குறிப்பிட்ட பணத்தில் ஒரு சிறுதொகை கூட அம்மக்கள் கைகளில் சேரவில்லை என்பதை உணர்ந்த மக்கள் சுவிற்சர்லாந்தில் பணம் சேகரித்தோரிடம் வினவியபோது அவர்கள் இது தொடர்பில் சிறிதரனிடம் விளக்கம் கோரியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறு சிறிதரன் ,இலங்கையிலுள்ள மக்களின் பெயரால் பலரிடமும் பணத்தினை பெற்று தனது பொக்கட்டில் போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு பரவாலாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com