பிணையில் விடுதலையான புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய சந்தேக நபர்கள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனையை விரைவில் பெற்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி, வழக்கை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் அறிக்கை 2011 ஏப்ரல் 20ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை, என இரகசியப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலியிடம் அறிவித்தையடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
No comments:
Post a Comment