சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு சரள சிங்களம் பயிற்சி.
தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பான வதிவிட மற்றும் மறுவாழ்வு மையங்களில் உள்ள முன்னாள் எல்ரிரிஈ போராளிகளுக்கு, அவர்கள் மறுவாழ்வுப் பயிற்சியின் ஓர் அங்கமாக சிங்கள மொழிப் பயிற்சியும் வழங்கப்படவிருக்கின்றது. அரசாங்கம் ஏற்கனவே 11,000 முன்னால் எல்ரிரிஈ யினரை விடுவித்துள்ளது. தற்போது 698 பேர் எஞ்சியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் சமூக ஒருங்கிணைவுத் திட்டத்தின் ஓர் அம்சமாக முன்னாள் எல்ரிரிஈ போராளிகளுக்கு, சிங்கள மொழிப்பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைவு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு இந்தப் பணியை மேற்கொண்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரசாத் ஹேரத் கூறுகிறார்.
தற்போது வெளிக்கந்தையில் உள்ள பாதுகாப்பான வதிவிட மற்றும் மறுவாழ்வு மையத்தில் 90 முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழிப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இத்தகைய மொழிப்பயிற்சிகள் இரு இனத்தினருக்குமிடையில் நிலவும் சந்தேகங்களைப் போக்கும் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment