சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
14 வயதுடைய பாடசாலை மாணவி யொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவலப்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நிமிர்த்தம் வெளியில் சென்றவேளையிலே குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment