குளியாப்பிட்டியில் இயங்கிய விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை! மூவர் கைது!
குளியாப்பிட்டிய பராக்கிரம மாவத் தையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட் டதுடன், அங்கு பணிபுரிந்த இரண்டு பெண்களையும், குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளரான பெண் ஒருவரையும், கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபச்சார விடுதியின் முகாமையாளராக பணியாற்றிய பெண் (38) கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கைது செய்யபபட்ட மற்றய பெண்கள் (31, 27 வயது) காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது முகாமையாளராக இருந்த பெண்ணுக்கு 50,000 ரூபா அபாரதமும் விதிக்கப்பட்டதுடன், மற்றய ஏனைய இரண்டு பெண்களின் வைத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment