தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்து பண மேசடியில் ஈடுபட்ட குழு தொடர்பிலான விசாரணை.
வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பிலிடு மாறு, தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கும் கும்பல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள தாகவும், இது தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட மிரிஹான, நுகேகொட ஆகிய பிரதேசங்களில், சில கும்பல்கள், தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பிலிடுமாறு அச்சுறுத்தி வந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தமது வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பிலிடாத பட்சத்தில், வீட்டில் உள்ளோருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொலைபேசி அழைப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, வங்கிகக் கணக்குகளில் நிதி வைப்பிலிடப்பட்டிருந்தால் அல்லது, தொலைபேசி அழைப்பு மாத்திரம் விடுக்கப்பட்டிருந்தால், உடனடியாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு, கேட்டுக்கொள்கிறோம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறான கும்பல்களை கைது செய்வதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும் எனவும், தொலைபேசிகள் இதற்கு பின்னர் கிடைக்கப்பெறுமாயின், உடனடியாக மிரிஹான பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். இதன்மூலம் சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்ய வாய்ப்பு கிடைக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment