சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் அதிகளவில் புகலிடம் கோரியுள்ள நிலையில், வீசா காலாவதியான வெளிநாட்டுப் பிரஜைகளையும், புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடு கடத்தவேண்டுமென இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனத்திற்கும் வெளிவிவகார அமைச்சிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க 243 புகலிடக் கோரிக்கையாளர்களும் 88 அங்கீகரிக்கப்பட்ட அகதிகளும், இலங்கையில் தங்கியிருப்பதாக தெரிவிக்ப்படுகின்றது.
No comments:
Post a Comment