தந்தையும் மகனும் சேர்ந்தே மோசடி வேலைகள் செய்கிறீர்கள்– ஜனாதிபதி.
தந்தையும் மகனும் சேர்ந்தே மோசடி வேலைகளைச் செய்கிறீர்கள் என்றும், உள்வீட்டுப் பிரச்சினையால் பொது மக்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள் என்று நேற்று நடைபெற்ற மாத்தளை மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரான பிரமித்த பண்டார தென்னக்கோனைப் பார்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. தம்புள்ளையில் மருத்துவமனையின் குறைபாடுகள் பற்றி கதைக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேற்படி மாகாண சபை உறுப்பினரின் தந்தையான, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
0 comments :
Post a Comment