ஊடக நிறுவனங்களுக்கு மடி கணனிகள் வழங்கப்படும் - தகவல் ஊடகத்துறை அமைச்சு
ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவ னங்களுக்கும், அரசாங்கம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ள தாகவும், இதனடிப்படையில் மடி கணனிகளை துரிதமாக வழங்க, நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மஹிந்த சிந்தனை எதிர்கால திட்டத்தின் கீழ், ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் கடந்த காலங்களில் ஏராளமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாவும், தொழில்சார் அறிவினை விருத்தி செய்வதற்காக, பட்டப்படிப்பு அல்லது ஏனைய கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு, ஊடகவியலாளர்களுக்கு இலவச புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், தங்களது தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக, நிவாரண கடன்களும் வழங்கப்படுவதாவும், தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடக நிறுவனங்களுக்கு மடி கணனிகளை வழங்கும் செயற்திட்டமொன்றை, தகவல் ஊடகத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 500 மடி கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொன்றும் 63 ஆயிரம் ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்ததுடன், ஒரு மடி கணனியொன்று ஒரு லட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் நேற்று வெளியான தகவல், அடிப்படையற்றதாகும் என தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கணனிகள் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதுடன், அதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஊடக நிறுவனங்களினால் வழங்கப்படுமென, அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணனிகளை ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தகவல் ஊடகத்து அமைச்சின் புதிய செயலாளர் சரித ஹேரத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment