பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இராணுவ வீரர் கைது.
வெலிகந்த சிங்கபுர பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வெலிகந்த பொலிஸார் தெரிவித்து ள்ளனர். குறித்த பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது 15சிறுமியை கடத்திச் சென்று அருகிலிருந்த காட்டுப் பகுதியில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய வேளை பொது மக்களினால் பிடிக்கப்பட்ட கைதி தப்பி செல்ல முயன்ற போது வெலிகந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment