Sunday, July 29, 2012

இலங்கையை தவிர எந்த ஒரு நாடும் யுத்தத்தின் பின்னர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கவில்லை.

பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் மக்களுக்கும் இராணுவத்தினர் பாரிய சேவையாற்றி வருகின்றனர் எனவும், மக்களுக்கு சேவையாற்றுவதில் இலங்கை இராணுவத்தினருக்கு நிகராக எந்த நாடுகளிலும் இராணுவத்தினர் இல்லை என பாதுகாப்பு மற்றும் நகர அமைசசின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், மனிதாபிமானமிக்க இராணுவத்தினர்களாக இலங்கை இராணுவத்தினரை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் எனவும், இறுதி யுத்தத்தில் சரணைடைந்த அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் ஜனாதிபதி புனர்வாழ்வளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனவும், அதற்கிணங்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சழூக மயப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேறு எந்த ஒரு நாடும் யுத்தத்தின் பின்னர் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்ததில்லை என்பதை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அமைசசின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment