முன்னாள் புலி உறுப்பினர் ராகமையில் மரணம்.
மரண விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என்கின்றார் இராணுவப் பேச்சாளார்.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்கள் சிறைப்பிடிப்பு விவகாரத்தை தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகள் பலர் வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டனர். இவ்வாறு மஹர சிறைச்சாலைக்கு இடம்மாற்றச் செய்யப்பட்ட ஒருவர் இராகம வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய அவர்களை இலஙகைநெற் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக கேட்டபோது, குறிப்பிட்ட நபர் வைத்தியசாலையில் உயிரிழ்துள்ளாகவும் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் மரண பரிசோதனை அறிக்கை நீதிமன்றிலிருந்து வெளிவரும்வரைமரணத்திற்கான காரணத்தை எமக்கு கூறமுடியது என்றார்.
0 comments :
Post a Comment