சிரியா வரம்பு மீறி செயல்படுகின்றது- பான் கீ மூன்
சிரியாவில் அன்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வரும் நிலையில் சிரிய கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாகவும், அதற்கான ஆயுதங்கள் தம்மிடம் உள்ளதாக சிரியா தெரிவித்ததற்கு ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செர்பியா நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், சிரியா இரசாயன ஆயுதங்களை இருப்பில் வைத்துள்ளமை மாபெரும் குற்றச்செயல் எனவும், இரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்பு விதிமுறைகளை சிரியா மீறுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ள பான் கீ மூன எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன நிலையில் சிரியா வரம்பு மீறி செயல்படுவதாகவும் பான் கீ முன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவியிலிருந்து விலகுவதாயின் அவர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிப்பதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சிரியாவில் தொடர்ந்தும் அதிகரித்துவரும் வன்முறையால் அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் டோ காவில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சிரியாவின் ஜனாதிபதி பதவியிலிருந்து அசாத் விலக வேண்டும். அப்படி விலகும் பட்சத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment