Tuesday, July 17, 2012

முதலமைச்சருக்கு சங்கீத நாற்காலி – சுழற்சி முறையில் பதவி.

வட மத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் ஒருவருக்கு 2 ½ ஆண்டுகள் பதவிக்காலம் என்ற தவணை அடிப்படையில் நியமிக்கப்படவிருப்பதாக அரசாங்கத் தகவல் ஊடாகத் தெரிய வருகின்றது. வட மத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சபரகமுவை மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தைச் சேர்தவரும் தொடர்ந்து முதலமைச்சராவதால் பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com