நாம் சமயப் போர் நடாத்த வேண்டியுள்ளது.
இனப்பிரச்சனை முடிந்த நிலையில் சமயப் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்றும், அதற்காக சமயப் போர் நடாத்த வேண்டியுள்ளது என சீயம் மகா நிக்காயவின் அஸ்கிரிய மகாநாயக்கர் அதிவண. உடகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் குறிப்பிட்டார்.
தீகவாவி புனித பூமியில் தங்கவேலியுடனான போதியை திறந்து வைத்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், முழு உலகத்துக்கும் வணங்குதற்குரியதான இந்த புனித பூமியை பாதுகாப்பது நமது கடமை. அதன் பொருட்டு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். விசேடமாக தீகவாவி புனித பூமியைப் பாதுகாக்க பாதுகாப்பு பிரிவு செய்த சேவையை நாம் போற்ற வேண்டும். போர் முடிந்து விட்டாலும் நாம் சமய யுத்தம் நடாத்த வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment