கி.மா. தேர்தல் – மு.கா. கோரிக்கை.
கிழக்கு மாகாணத் தேர்தலின் போது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிமட காங்கிரஸ் தயாரித்துள்ள புரிந்துணர்வு ஆவணங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரவூப் ஹக்கிமுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெறும்.
எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினையைத் தீர்த்தல் மற்றும் மக்களின் விகிதத்துக்கு ஏற்ப முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவி வழங்கல் போன்றவைகள் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நல்ல பலன் கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடத் தயாராகவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment