Sunday, July 15, 2012

அடுத்த ஜனாதிபதியாக வருவதாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியூடாகவே வருவேன். சந்திரிகா

தான் இன்னும் ஸ்ரீ.ல.சு.க.வின் உறுப்பினர் என்றும் மீண்டும் அரசியலுக்கு வருவதாயின் அது ஸ்ரீ.ல.சு.க ஊடாகத்தான் இருக்கும் என்றும் ஆனால் தான் மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி திர்மானிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியிருக்கின்றார்.

ஸ்ரீ.ல.சு.க வின் உயர் மட்ட உறுப்பினர்கள்பலர் மற்றும் இடதுசாரிக்க் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் நடவடிக்கையைத் தொடங்கவிருப்பதாக அடிபடும் செய்தி பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும், ஊடகத் தலைவர் மங்கள சமரவீரவும் சேர்ந்து முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்த தந்திரமாகச் செயற்பட்டு வருவதாகவும், முற்றிலும் தனக்குச் சார்பான செயற்குழுவைக் கொண்டு ரணில் இதனைச் செய்து வருவதாகவும் ஐ.தே.க. மற்றும் அதன் தொழிற் சங்கங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளராகிய மறுசீரமைப்புவாதி லால் பெரேரா குற்றம் சுமத்துகின்றார்

1 comments :

ARYA ,  July 15, 2012 at 3:06 AM  

very good, she knows already power of our GREAT President Mr. Mahinda Rajepakse , she can forget for any times her unpossibles dreams.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com