திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை
திருகோணமலை - உப்புவெளி அலஸ்வத்தையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்டு, அந்த விபச்சார விடுதியில் இருந்து மூன்று ஆண்களையும், இரு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment