நோர்வே வாழ் இலங்கையர்கள் தாயகத்தின் மீது வைத்துள்ள பற்றினை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
தாம் பிறந்த மண்ணிலிருந்து பல்லாயி ரக்கணக்கான தொலைவில் வாழ்ந்த போதும், நோர்வேயில் வசிக்கும் இலஙகையர்கள் நாட்டிற்காக வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
30 வருட பயங்கரவாதத்திலிருந்து மீண்டு தற்போது அபிவிருத்தியை நோக்கி நாடு பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்காக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உலகெங்கிலுமுள்ள இலங்கையர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்காக தங்களால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்குவதற்கு முன்நின்று செயற்பட போவதாக இங்கு கருத்து தெரிவித்த நோர்வே வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மன்னார்கன்டல், உடையார்கட்டு ஆகிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதங்கும் வடக்கில் பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கும் இக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி தொடர்பாக நோர்வே பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அறிவிப்பதாகவும் இவ்வைபவத்தில் கலந்து கொண்ட நோர்வேக்கான இலங்கை தூதுவர் ரொட்டி பெரேரா தெரிவித்தார். இதற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி அனைத்தின மக்களிடம் நிலவும் அந்நியோன்யம் இலங்கiயின் எதிர்கால அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமையுமென தெரிவித்தார்.
0 comments :
Post a Comment